Fri. Aug 22nd, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு – Mayor-க்கு எதிராக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தஞ்சாவூர் – ஆகஸ்ட் 4 தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று காலை தொடங்கியவுடன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டத்தின் ஆரம்பத்தில் முதலே மேயர் சன். ராமநாதனுக்கு எதிராக சில மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனையடுத்து, பலர்…

AITUC சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆகஸ்ட் 4 – தஞ்சாவூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் சேவையை தனியார் கையாள்வோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, AITUC தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த தொடரில், தஞ்சாவூரில்…

குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் பொதுமக்கள் அவதி – முடிக்கப்பட்ட கழிவறை பயன்பாட்டுக்கு வராததால் பெண்கள் அவதி.

ஆகஸ்ட் 4📍 வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் தாழையாத்தம் மாங்காளியம்மன் கோவில் தெருவில், 2022–2023ஆம் ஆண்டுக்கான 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் சுமார் ₹5 லட்சம் செலவில் புதிய கழிவறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் முடிக்கப்பட்டு இரண்டாண்டுகளாக ஆகின்ற…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன அறிவிப்பு…!

நாமக்கல் மாவட்டம்: நமது தேடல் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு சேவை புரியும் நாமக்கல் மாவட்ட முதன்மை செய்தியாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் செய்தி சேகரிக்கச் சென்றபோது, சில சமூக விரோதிகள் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆடி 18 – தீரன் சின்னமலை நினைவு நாள் விழா…!

அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜி. அசோக்கன்,…

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.

தஞ்சையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோயில் அருகிலும், கரை புரண்டு ஓடும் கல்லணை கால்வாய், புது ஆற்று படித்துறை, வெண்ணாற்றாங்கரை, வடவாறு நாகநாதசுவாமி படித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் காவிரி…

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேர் திருவிழா…!

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 750 பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கே.வி.குப்பம் ஒன்றிய புதிய நீதிக்கட்சி 2வது வார்டு சார்பாக…

குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக தந்தை-மகன் உட்பட 6 பேர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் ஆர். செல்வம் தலைமையில் போலீசார் காட்பாடி சாலையில் உள்ள அஸ்வினி பார்க்கிங் பகுதியில் திடீர் சோதனை…

குடியாத்தம் ஆர். எஸ். பெரியார் பட்டறை – ஓம் சக்தி புற்று அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆர். எஸ். பெரியார் பட்டறை நாகல் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில், இன்று (03.08.2025) கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி பக்தி சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகி ராணி…

வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மாபெரும் இலவச கண் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம்.

வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து, கடந்த 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று குடியாத்தம் கணபதி நெசவாளர் நகரம், லிங்குன்றத்தில் மாபெரும் இலவச கண்…