Sun. Mar 22nd, 2026

விழுப்புரம் | மாவட்டம்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் தர மருத்துவ கருவிகள் ஆகியவற்றை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டிடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்,
திமுக துணைப் பொதுச்செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் க. பொன்முடி,
விழுப்புரம் மத்திய மாவட்ட கட்சி பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா. இலட்சுமணன்,
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார்,
விழுப்புரம் தெற்கு திமுக மாவட்ட கட்சி பொறுப்பாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி,
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம. ஜெயச்சந்திரன்
உள்ளிட்டோர் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


செய்தி :
V. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ் நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி

 

By TN NEWS