Sun. Mar 22nd, 2026

வடமதுரை – ஜனவரி 29

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு கல்லூரி தலைமையாசிரியர் முனைவர் அ.வேலாயுதம், பள்ளி தலைமை ஆசிரியர் கணேசவதி, வடமதுரை காவல் துறை சார்பு ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

விழாவின் ஒரு பகுதியாக மாணவிகளுக்கான பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண் குழந்தைகளின் கல்வி, உரிமைகள் மற்றும் சமூகப் பங்குத்திறன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது.

இந்த விழா ஏற்பாடுகளை S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள்
ரா. குரு சித்தா, க. காவியா, கா. ஞானவள்ளி, மு. ஹரிணிபிரியா, நா. காவியா, கெ. ஜென்சி பவுலின் மேரி, பா. கார்த்திகா, ப. கார்த்திகா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

சித்திரபிரகாஷ்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS