Sat. Feb 7th, 2026

காந்திகிராமத்தில் நடைபெற்ற விழா.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா, காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

வரவேற்புரை மற்றும் தலைமை உரை
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சி.ராஜேஸ்வரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குநர் கோவிந்தராசு அவர்கள் தலைமை உரையாற்றி, சிறுதானியங்களின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

முன்னிலை மற்றும் சிறப்புரைகள்
காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் (பொ) பி.பி.சரவணன் அவர்கள் முன்னிலை உரையாற்றினார். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) முனைவர் மு.ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என்.வி.நாகேந்திரன், மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை) இரா.சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விவசாயிகளுக்கு பயிற்சி
இந்த சிறுதானிய திருவிழாவில், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சிறுதானிய மதிப்பு கூட்டல் உள்ளிட்ட தலைப்புகளில் விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. இதன் மூலம் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது குறித்து விளக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
சித்திர பிரகாஷ்

By TN NEWS