Fri. Feb 27th, 2026

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு:

திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி ஜனவரி 26 (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதற்காக பழைய பாலம் இடிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக, தோட்டியோடு – இரணியல் மாநில நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

🚦 போக்குவரத்து மாற்ற விவரங்கள்:

▪ தோட்டியோட்டில் இருந்து திங்கள் நகருக்கு
குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்.
→ பரசேரி வழியாக
→ கொன்னக்குழிவிளை நான்கு வழிச் சாலை
→ பேயன்குழி ஆற்றுப் பாலம்
→ பேயன்குழி பாலம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

▪ கனரக வாகனங்கள்:
அனைத்து கனரக வாகனங்களும்
→ தோட்டியோடு – தக்கலை – இரணியல் வழியாக
→ திங்கள் நகரை அடைய வேண்டும்.

▪ திங்கள் நகரிலிருந்து நாகர்கோவிலுக்கு
குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள்:
→ பேயன்குழி ஆற்றுப் பாலம்
→ நான்கு வழிச் சாலை
→ கொன்னக்குழிவிளையில் இடது பக்கம் திரும்பி
→ வில்லுக்குறி பாலம் சந்திப்பு வழியாக
→ நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டும்.

▪ பிற அனைத்து வாகனங்கள்:
→ மடவிளாகம் – குருந்தன்கோடு – பேயோடு வழியாக
(அல்லது)
→ இரணியல் – தக்கலை வழியாக
→ நாகர்கோவிலுக்கு செல்லலாம்.

▪ முக்கிய அறிவிப்பு:
ஆறுசக்கரத்திற்கு மேற்பட்ட அனைத்து வகை கனரக வாகனங்களும்
❌ பேயன்குழி ஆற்றுப் பாலம் வழியாக செல்லக் கூடாது.

அவை கட்டாயமாக:
✔️ இரணியல் – தக்கலை பாதை
(அல்லது)
✔️ மடவிளாகம் – குருந்தன்கோடு பாதையை
பயன்படுத்த வேண்டும்.

பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

By TN NEWS