Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

போதைப் பொருள் எதிர்ப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (03.02.2026) போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் மனநல விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் இந்த…

விளையாட்டுத் துறையில் சின்னமனூர் மாணவியின் சாதனை…!

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, மாவட்ட அளவிலான வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள்…

மாற்றுத்திறன் தடையல்ல – மன உறுதியே வெற்றியின் பாதை…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்ற இளம் பெண், தனது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறன் வாழ்க்கையில் ஒரு தடையல்ல; அதை…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் பழனி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திவியாபிரவணம் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் கலந்து…

விவசாய வளம் வேண்டி ‘நிலா பெண்’ வழிபாடுவேடசந்தூர் அருகே கோட்டூர் தேவி நாயக்கன்பட்டியில் நூற்றாண்டு பாரம்பரியம்.

வேடசந்தூர்:வேடசந்தூர் அருகே அமைந்துள்ள கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயம் செழிப்படைய வேண்டி தைப்பூச தினத்தன்று ‘நிலா பெண்’ வழிபாடு எனப்படும் பாரம்பரிய வழிபாடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தேர்வு – எட்டு நாள் விரதம்: இந்த…

ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரல் அய்யலூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

வடமதுரை, பிப். 2:அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வடமதுரை ஒன்றியக் குழு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத் – ஜி ராம் ஜி திட்டத்தை கைவிடக் கோரியும்,…

தீர்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 300-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

தீர்த்தமலை:தீர்த்தமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், TR கல்வி அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இணைந்து நடத்திய அமைப்புகள்: இந்த முகாம் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த்…

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சின்னமனூர், பிப். 2:சின்னமனூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விவசாயக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா…

முதல்வர் தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சிப்பது சரியல்ல. ஜான் பாண்டியன். சோழ மன்னர்களை இழிவுபடுத்திய பேச்சுக்கு கடும் கண்டனம்.

பள்ளிகொண்டா, பிப்ரவரி 1 :தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் ஜான்…