Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கு: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – கடலூர் சிறையில் அடைப்பு.

விழுப்புரம், ஏப்ரல் 6: விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற 4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த…

குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் – திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் வித்தியாச பிரச்சாரம்!

குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் – திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் வித்தியாச பிரச்சாரம்! திருப்பத்தூர், ஏப்ரல் 6: தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் வித்தியாசமான தேர்தல் காட்சி ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. திருப்பத்தூர்…

வனத்துறையை கண்டித்து குடியாத்தம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.

குடியாத்தம், ஏப்ரல் 6: வனத்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்…

திண்டுக்கல் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.10 லட்சம் பறிமுதல்.

திண்டுக்கல், ஏப்ரல் 6: திண்டுக்கல் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,10,000 பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த பழைய கரூர் சாலையில் உள்ள செல்லமந்தாடி சோதனைச் சாவடி பகுதியில், சிவராமகிருஷ்ணன்…

குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காததால் தேர்ந்த பிரசார பாதுக்காப்பு போலீசார் புலம்பல்.

📍 சென்னை, ஏப்ரல் 6 சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை” என்று போலீசார் வேதனை தெரிவித்து வருகின்றனர். தேர்தல்…

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு…!

ஏப்ரல் 5 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பூசாரி வலசை பகுதியில் பரிதாபகரமான விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் மாணிக்கம் (த/பெ ரங்க கவுண்டர்) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தரை கிணற்றில், ஆந்திர மாநிலம் யாதமரி பகுதியைச் சேர்ந்த…

குடியாத்தம் தொகுதியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

குடியாத்தம், ஏப்ரல் 5: வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப…

தேவனூரில் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு.

செஞ்சி, ஏப்ரல் 5: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம் தேவனூரில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார், பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு முன்பாக, தேவனூர் கிராமத்தில் அமைந்துள்ள…

குடியாத்தம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பு.

குடியாத்தம், ஏப்ரல் 5: வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனித்தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன், வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…

🗳️ குடியாத்தத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்.

குடியாத்தம், ஏப்ரல் 4 வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனித்தொகுதி தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் சிந்து இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை முன்னிட்டு, குடியாத்தம் காமராஜ் பாலம் அருகிலிருந்து செண்டை மேளம்…