வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற விழாவில், குடியாத்தம் தமிழ் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளரும் பேராசிரியர்–முனைவருமான சம்பத்குமார் அவர்களுக்கு, வாலாஜா தமிழ் சங்கத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.
தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கியப் பங்களிப்பு மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான நீண்டகால சேவையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது. கல்விக்கோ வேந்தர் ஜி. விஸ்வநாதன் மற்றும் பாலமுருகன் அடிமை சாமி ஆகியோர் இணைந்து விருதினை வழங்கி கௌரவித்தனர்.
விழாவில் தமிழ் இயக்கத்தின் தமிழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் அப்துல் காதர், உலக திருக்குறள் பேரவையின் செயலாளர் கவிஞர் மா. ஜோதி உள்ளிட்டோர் உடன் இருந்து சிறப்பித்தனர். தமிழ் பணியில் ஈடுபடும் அறிஞர்களை கௌரவிப்பது மொழி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என உரையாற்றினர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்