வேலூர் மாவட்டம் | திமுக
வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், சி.ந.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
அதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, “அண்ணா காட்டிய சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை வழியில் அயராது உழைப்போம்” என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில்
AP. நந்தகுமார் MLA (வேலூர் மாவட்ட செயலாளர்),
ப. கார்த்திகேயன் MLA (மாநகரச் செயலாளர்),
தி.அ. முகமது சகி (மாவட்ட அவைத்தலைவர்),
திருமதி சுஜாதா (மாநகராட்சி மேயர்),
மு. பாபு (மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்),
V.S. விஜய் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),
C. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),
R.P. ஏழுமலை (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று நினைவேந்தலை சிறப்பித்தனர்.
தி. தென்பாண்டியன்
வேலூர்
மாவட்ட செய்தியாளர்
