Tue. Jan 13th, 2026

Category: நிருபர் பக்கம்

தென்காசி: காவலில் இருந்து தப்பிச்சென்றவரை தேடி சென்ற 5 போலீஸார் மலைப்பகுதியில் சிக்கல் – தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அதிரடியாக மீட்பு.

தென்காசி, டிசம்பர் 5:தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில், காவலில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளியை தேடிச் சென்ற போது, ஐந்து போலீசார் ஆயிரம் அடி உயரமுள்ள கடினமான மலைப்பகுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு முழுவதும் மலைப்பகுதியில் சிக்கிய காவலர்கள்:…

குடியாத்தம் நகரில் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் மௌன ஊர்வலம், அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடியாத்தம், டிசம்பர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மௌன ஊர்வலத்துக்கு ஜே.கே.என். பழனி தலைமையேற்று வழிநடத்தினார்: நகர…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் – பல முக்கிய பிரச்சனைகள் முன்வைப்பு.

குடியாத்தம், டிசம்பர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். அதிகாரிகள் பங்கேற்பு: வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை…

குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை.

குடியாத்தம், டிசம்பர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பெரியான் பட்டறை கிராமத்தில் அமைந்துள்ள ஓம் சக்தி புற்று அம்மன் கோவிலில் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நீண்டநேரம் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் – தீபாராதனை: ஆலய நிர்வாகி…

அரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிய மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில அமைப்பாளர் தலைவர் சீனிவாசன், மலர் தூவி, மாலை அணிவித்து,…

பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலாலிதா அவர்களுக்கு 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிமையாகவும், மரியாதையுடனும் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், செய்தியாளர்கள், அமைப்பினர்கள், உள்ளூர் செயலாளர்கள்…

இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…

வேலூர்: “ஏமாற்றப்பட்டோம்… மீண்டும் போராடுகிறோம்” – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மறியல்! 200-க்கும் மேற்பட்டோர் கைது.

வேலூர், டிச. 4:தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன:“தமிழ்நாடு…

தருமபுரி: ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் கூட்டுறவு சங்கக் கட்டிடப் பணி – அடித்தளம் அமைப்பதில் முறைகேடா? மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை!

தருமபுரி:தருமபுரி மாவட்டம், திப்பிரெட்டிஅள்ளி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி…

குடியாத்தம் காசி விசுவநாதர் ஆலயத்தில் மகர தீபம் ஏற்றம்

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் வளாகத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (03.12.2025) புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகர தீபம் ஏற்றப்பட்டது. மகர தீபம் ஏற்றப்பட்ட…