விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெரு பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கொண்டு வந்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், 90 மில்லி லிட்டர் அளவு கொண்ட புதுச்சேரி மதுபான பாட்டில்கள் 100 எண்ணிக்கை அவரது உடமையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் விழுப்புரம் நந்தனார் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் ஆனந்தன் (வயது 40) என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி மாநில மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்ததாக ஆனந்தன் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்:
தமிழ். மதியழகன்