விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம்.
13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.
அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

ஆனால், அந்த இறுதிப் பயணம் மரியாதையுடனும், மனிதத்தன்மையுடனும் நடைபெற வேண்டிய தருணம்,
மக்களுக்கு மனவேதனை, அவமானம், நிர்வாக அலட்சியத்தின் வலியாக மாறியது.
இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கான அடிப்படை தேவைகள் என்றால் உணவு – உடை – இருப்பிடம் என்பதே அனைவரும் அறிந்த உண்மை.

அதேபோல்,
ஒருவர் இந்த மண்ணுலகை விட்டு மறையும் போது,
அவருக்கான இறுதி நிரந்தர உறைவிடம் – சுடுகாடு
அதுவும் ஒரு அடிப்படை மனித உரிமைதான்.
வெவ்வால்குன்றம் கிராம மக்களுக்கு,
உணவு உள்ளது…
உடை உள்ளது…
இருப்பிடம் உள்ளது…
👉 சுடுகாடும் உள்ளது.
ஆனால்,
👉👉 அந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கான முறையான, பாதுகாப்பான, மனித மரியாதைக்கு ஏற்ற பாதை இல்லை!
இது இன்று தோன்றிய பிரச்சினையல்ல.
இந்த சுடுகாட்டுப் பாதை குறித்து
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும்,
இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு மனிதனின் இறுதிப் பயணத்தில் கூட
அவரது உடலை தூக்கிச் செல்ல முடியாத நிலை
மக்களை கண்ணீர் சிந்த வைத்த நிர்வாகத் தோல்வி அல்லவா?
👉 உயிரோடு இருக்கும் போது சாலை, மின்சாரம், குடிநீர் முக்கியம் என்றால்
👉 இறந்த பிறகு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை முக்கியமல்லவா?
வெவ்வால்குன்றம் கிராம மக்களின்
👉 அடிப்படை மனித உரிமையாகிய
👉 சுடுகாட்டுப் பாதை பிரச்சினைக்கு
உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என
கிராம மக்கள் ஒருமனதாக வலியுறுத்துகின்றனர்.
இனி ஒருவரின் இறுதிப் பயணம்
வலியாகவும், அவமானமாகவும், போராட்டமாகவும் மாறக்கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
