தென்காசி, டிச.16
திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட தென்காசி டிப்போவிலிருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், மாற்றுத்திறனாளி முதியவரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமலைகோயில் – திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்ட 124 AP (TN 19 24) என்ற பேருந்தில் பயணித்த 78 வயதுடைய கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி முதியவர், அச்சன்புதூர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நிலையில், பொதுமக்கள் ஓட்டுநரிடம் தெரிவித்தும், அங்கு இறக்கிவிடப்படவில்லை.
இதையடுத்து, அந்த முதியவர் ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டி நெடுவயல் பகுதியில் இறக்கிவிடப்பட்டதாகவும், அவரிடம் ஓட்டுநர் மரியாதையின்றி பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக,
AICCTU தென்காசி மாவட்ட தலைவர் M. அழகையா
ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
போக்குவரத்து ஊழியர்களுக்கு மனிதாபிமானப் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அலட்சியம் தொடருமானால், போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நிர்வாக அறிக்கை / புகார் மனு:
தமிழக அரசே!
தென்காசி மாவட்ட நிர்வாகமே!
திருநெல்வேலி மண்டல போக்குவரத்து நிர்வாகமே!
தென்காசி டிப்போ போக்குவரத்து நிர்வாகமே!
பொருள் :
மாற்றுத்திறனாளி முதியவரை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அவமரியாதையாக நடந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை கோருதல் – தொடர்பாக.
மதிப்பிற்குரியவர்களே,
16.12.2025 அன்று காலை,
திருமலைகோயில் – திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்ட
124 AP
வண்டி எண் : TN 19 24
என்ற அரசுப் பேருந்து, வடகரை அரசு மருத்துவமனைக்கு சென்று அச்சன்புதூர் வரும் வழியில்,
அச்சன்புதூர் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டிய
கண்பார்வையற்ற 78 வயதுடைய மாற்றுத்திறனாளி முதியவரை,
பேருந்தில் பயணித்த பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும்,
பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல்,
ஒரு கிலோமீட்டர் தாண்டி நெடுவயல் பகுதியில் இறக்கிவிட்டு,
அவரிடம் மரியாதையற்ற முறையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
இது,
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்கு எதிரானது
மனிதாபிமானமற்ற செயலாகும்
அரசுப் போக்குவரத்து துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்
எனவே,
1. குற்றம் செய்த ஓட்டுநர் மீது உடனடி துறை ரீதியான நடவடிக்கை
2. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தொடர்பாக ஓட்டுநர் – நடத்துநர்களுக்கு மனிதாபிமான பயிற்சி
3. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் கட்டுப்பாடுகள்
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தாமதமும் அலட்சியமும் பொதுமக்கள் போராட்டத்தை தூண்டும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவன்,
M. அழகையா
மாவட்ட தலைவர் – AICCTU
தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்
CPI (ML) – தென்காசி மாவட்ட குழு உறுப்பினர்
நெடுவயல், அச்சன்புதூர்
📞 90037 82792
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்
