Wed. Nov 19th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

விழுப்புரம் வடக்கு திமுக — அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் அவர்கள் தலைமையேற்றார்.…

குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நினைவேந்தல்.

நவம்பர் 14 — குடியாத்தம். முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் (சிறுவர் தினம்) நினைவேந்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பகுதியில் இன்று நடைபெற்றது. குடியாத்தம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

குடியாத்தத்தில் பாஜக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டம்.

நவம்பர் 14 — குடியாத்தம் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு, குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சியினர் இன்று கொண்டாட்ட நிகழ்வை நடத்தினர். குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்,…

புதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். இணை இயக்குநர் பொன்னையா அறிவுரை.

புதுக்கோட்டை, நவம்பர் 13:வரவிருக்கும் நவம்பர் 15 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகவும், எவ்வித புகாருமின்றி நடைபெற வேண்டும்…

பாப்பிரெட்டிப்பட்டியில் பழங்குடி மக்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோனம்பட்டி ஊராட்சி ஆலமரத்தூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இதுவரை சுடுகாடு இல்லாததால் நீண்டகால பிரச்சினை நிலவி வந்தது. முன்னதாக அவர்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு நிலம், நீர்நிலை புறம்போக்கு நிலம் எனக் குறிப்பிடப்பட்டதால், அங்கு…

திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்கம்.

நவம்பர் 12 | திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் பிரிவில் புதிதாக பொருத்தப்பட்ட இரண்டு புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே,…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநில செயலாளராக இரா. விக்ரமன் நியமனம். மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து!

தருமபுரி (நவம்பர் 12):தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) SC துறையின் மாநிலத் தலைவர், திரு. எம்.பி. ரஞ்சன்குமார் அவர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரா. விக்ரமன் அவர்களை மாநில SC துறை மாநில செயலாளராக நியமித்துள்ளார். இந்நியமனத்தைத் தொடர்ந்து, இரா. விக்ரமன்…

குடியாத்தத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலையில்

குடியாத்தம் (நவம்பர் 12):வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கொண்டசமுத்திரம் ஊராட்சி, சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மிகப் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள சக்தி நகர், கிருஷ்ணா கார்டன், வள்ளலார் நகர்…

குடியாத்தத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் – அடிக்கல் நாட்டும் பூமி பூஜையும் நடைபெற்றது.

குடியாத்தம் (நவம்பர் 12):வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் கூடநகரம் ஊராட்சியில், 15வது நிதிக் குழுத் திட்டம் (2025–2026) மற்றும் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் பூமி பூஜை…