Mon. Jan 12th, 2026

Category: மக்களின் குறை

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் – அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்.

குடியாத்தம், டிசம்பர் 17 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக…

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் – பஞ்சாயத்து நிர்வாக தலையீடு கோரும் விவசாயிகள்!

தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் உள்ள வேலாயுதபுரம் சாலையை ஒட்டிய விளைநிலங்களில், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் மற்றும் நாற்றுகள் சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் சிலர் பன்றிகளை வளர்த்து வருவதால், அவை அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து…

சாலை வசதி கோரி நாற்று நடும் போராட்டம் – பொதுமக்கள் கோரிக்கை!

தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி, முப்புடாதி அம்மன் கோவில் தெரு (1வது வார்டு) பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

அச்சன்புதூரில் மாற்றுத்திறனாளி முதியவரை அவமதித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் – நடவடிக்கை கோரி கோரிக்கை!

தென்காசி, டிச.16 திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட தென்காசி டிப்போவிலிருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், மாற்றுத்திறனாளி முதியவரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமலைகோயில் – திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்ட 124 AP (TN 19 24) என்ற…

விழுப்புரத்தில் புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்தவர் கைது – 100 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட GRP தெரு பகுதியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்…

சுடுகாட்டுப் பாதை – மனித உரிமை மறுக்கப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம். 13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆனால், அந்த இறுதிப்…

**நெல்லை – தென்காசியில் மிக கனமழை எச்சரிக்கை!
கடலோரம் முதல் மலை கிராமங்கள் வரை கனமழை வாய்ப்பு**

தென்காசி / நெல்லை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குளிர் மற்றும் பனிப்பொழிவின் தாக்கம், இன்று மற்றும் நாளை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று…

அடிப்படை வசதிகளே இல்லாத இருந்தை கிராமம்!
உயிரிழப்புக்குப் பிறகும் அலட்சியமா?
📢 கலெக்டர் & அமைச்சர்கள் கவனத்திற்கு!

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருந்தை கிராமம், பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை, நடைபாதை, பாதுகாப்பான செல்லும் வழி…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…