கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய பரமநத்தம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.32 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் இந்தப் பணியை, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கட்சி செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான தா. உதயசூரியன், B.Sc., MLA அவர்கள் கலந்து கொண்டு, தலைமையேற்று தனது பொற்கரங்களால் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய கட்சி செயலாளர் வழக்கறிஞர் S.P. அரவிந்தன், MSW., LLB.
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய கட்சி அவைத்தலைவர் V. ரவிக்குமார்
சங்கராபுரம் மேற்கு ஒன்றிய கட்சி செயலாளர் ஆறு. கதிரவன், B.E.
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி R. இளையராஜா
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான எம்.பி. அருள், M.A., B.Ed.
பரமநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்தையாப்பிள்ளை
பரமநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி. அருள்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் A. நாராயணசாமி
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பா. ரவீந்திரன்
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் K. முனுசாமி
மேலும், துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதிய தார்சாலை அமைக்கப்படுவதால், பரமநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து சிரமம் தீரும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வி. ஜெய்ஷங்கர்

