Sat. Jan 10th, 2026


விழுப்புரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,
விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,
வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில்
ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,

மக்கள் நல விரோத சட்டத்திற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும்,
சென்னையிலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆலோசனைகள் வழங்கியவர்:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக கட்சி பொறுப்பாளரும்,
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான
டாக்டர் இரா. இலட்சுமணன் கலந்து கொண்டு,
ஆர்ப்பாட்டம் தொடர்பான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டோர்:
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இரா. ஜனகராஜ், வழக்கறிஞர் இரா. கண்ணப்பன்
மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் நம்மவர் பாபு
தமுமுக மாவட்ட செயலாளர் ஜாமியலும் ராவுத்தர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் பாலமுருகன்
மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது ஜக்கரியா, இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் சுல்தான் மொய்தீன்,விசிக மாவட்ட செயலாளர்கள் பெரியார், பொண்ணிவளவன், CPM மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், CPI மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் பாபு கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள்,
ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ் நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS