கள்ளக்குறிச்சி | 20.12.2025
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் பல ஆண்டுகளாக நிலவி வரும் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள், இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக, பல்வேறு கட்டமைப்பு மற்றும் நிர்வாக வசதிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்களின் முக்கிய கோரிக்கைகள்:
சங்கராபுரம் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக பின்வருவன முன்வைக்கப்படுகின்றன:
1. கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை ரயில் பாதை சங்கராபுரம் வழியாக அமைக்கப்பட வேண்டும்.
2. கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
3. சங்கராபுரத்தை தலைமையிடமாக கொண்டு பாண்டலம், வடசிறுவள்ளூர், பூட்டை, வடசெட்டியந்தல் ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிய நகராட்சி அறிவிக்க வேண்டும்.
4. சங்கராபுரம் தலைமையிடமாக புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் (DSP Office) அமைக்க வேண்டும்.
5. சங்கராபுரத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் (கள்ளக்குறிச்சி – 20 கி.மீ., திருக்கோவிலூர் – 38 கி.மீ.).
6. சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் 24×7 மருத்துவ சேவை உறுதி செய்யப்பட வேண்டும்.
7. சங்கராபுரம் சிப்காட் (SIPCOT) திட்ட பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
8. கல்வராயன்மலையை சுற்றுலாத்தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும்.
9. சங்கராபுரம் நகரின் மையத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து, புதிய இடத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
10. சங்கராபுரம் தொகுதியில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.
11. சங்கராபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளியை, நகரின் பழைய பகுதியில் மீண்டும் அமைக்க வேண்டும்.
12. கல்வராயன்மலை பகுதி வளர்ச்சிக்காக கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
முதல்வர் அறிவிப்பார்களா?
இம்மாதம் 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்த நீண்டநாள் கோரிக்கைகளில் சிலவற்றையாவது அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு, சங்கராபுரம் தொகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிராந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசின் கவனம் இந்த கோரிக்கைகளின் மீது திரும்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

