Sun. Jan 11th, 2026

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.

தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும் கனிமவள ராட்சத வண்டிகள் காரணமாக,
➡️ கடும் போக்குவரத்து நெரிசல்,
➡️ பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்,
➡️ சுற்றுச்சூழல் சேதம்,
➡️ பண்பாட்டு – ஆன்மீக பாதைகள் பாதிப்பு

என பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருவதாகக் கூறி, தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செங்கோட்டை:

1957 நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுடன் இணைந்த செங்கோட்டை,ஒருகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முக்கிய நகரமாகவும்,பின்னர் தமிழகத்தின் பண்பாட்டு – அரசியல் – ஆன்மீக அடையாளமாகவும் விளங்கிய நகரமாகும்.

சட்டநாத கரையாளர் போன்ற மாமனிதர்கள்,
மொழிவழி பிரிவினை காலத்தில் செங்கோட்டையின் அடையாளத்தை காத்த வரலாறு, இந்த மண்ணின் பெருமையை எடுத்துரைக்கிறது.

இன்றைய நிலை – கனிமவள வண்டிகளால் சிக்கித் தவிக்கும் செங்கோட்டை:

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து, செங்கோட்டை வழியாக கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் ராட்சத வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால், இருசக்கர வாகன பயணிகள் அச்சத்தில் பயணம் செய்யும் நிலை, பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் கடும் சிரமம்,செங்கோட்டை காவல் நிலையம் அருகே தினசரி போக்குவரத்து நெரிசல்

🚨 🚑 🚒 அவசர மருத்துவ, தீயணைப்பு வாகனங்களுக்கு தடையுண்டாகும் சூழல், உருவாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆன்மீக – பண்பாட்டு பாதைகள் பாதிப்பு
திருக்குற்றாலம், சபரிமலை, அச்சன்கோவில், ஆரியங்காவு ஆகிய ஆன்மீக பாதைகளின் மைய நகரமாக இருக்கும் செங்கோட்டை, மகரஜோதி காலம், ஐயப்ப பக்தர்கள் பெருகும் இந்த நேரத்தில், இந்த போக்குவரத்து நெருக்கடியால் ஆன்மீகப் பயணிகள் வேறு வழிகளைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் & எதிர்காலக் கவலை….?

கேரளாவில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தபோதும்,
➡️ தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள
➡️ சிறு குன்றுகள், தரைக்குவாரிகள்
➡️ மண், கற்கள்

அதிக அளவில் எடுத்துச் செல்லப்படுவது,
எதிர்காலத்தில் தென்காசி மாவட்டத்தில் வீடு கட்டும் கனவையே கேள்விக்குறியாக மாற்றும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

20 நாட்கள் தற்காலிக தடை கோரிக்கை:

மகரஜோதி – ஐயப்ப பக்தர்கள் உச்சமாக வரும் இந்த காலகட்டத்தில்,

➡️ குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு
➡️ கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை
➡️ செங்கோட்டை வழியில் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்

என ஊர் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

“செங்கோட்டையின் மீது கடைக்கண் பார்வை வேண்டும்”

“பதின்ம வயதில் கண்ட செங்கோட்டையை மீண்டும் காண வேண்டும்” என்ற உணர்வோடு,செங்கோட்டை பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ச. பென்னிகுயிக் பாலசிங்கம்
முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.


பொதுமக்கள் கோரிக்கை – Tag / Representation:

Tags :

Hon’ble Chief Minister of Tamil Nadu

Hon’ble Deputy Chief Minister of Tamil Nadu

Minister for Transport – Tamil Nadu

Minister for Mines & Geology – Tamil Nadu

Minister for Environment & Forests – Tamil Nadu

Chief Secretary, Government of Tamil Nadu

DGP, Tamil Nadu Police

District Collector – Tenkasi

Superintendent of Police – Tenkasi

RDO / Tahsildar – Sengottai

Highways Department

Mining & Revenue Department


இறுதியாக:

இது ஒரு அரசியல் கோரிக்கை அல்ல.
இது ஒரு மண்ணின் குரல்.
ஒரு வரலாற்று நகரத்தின் உயிர் பாதுகாப்பு, பண்பாட்டு பாதுகாப்பு, எதிர்கால பாதுகாப்பு.

“நம்பிக்கையே வாழ்க்கை”
என்ற நம்பிக்கையோடு,
செங்கோட்டை மக்கள் முதல்வரின் தலையீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


✍️ ச. பென்னிகுயிக் பாலசிங்கம்
தலைவர்
செங்கோட்டை பண்பாட்டு ஆய்வு மையம்

📰 செய்தி : J. அமல்ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் | தமிழ்நாடு டுடே

By TN NEWS