Sun. Jan 11th, 2026

குடியாத்தம் | ஜனவரி 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி (45), தந்தை பழனி, என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக
👉 புகையிலை,
👉 பான் மசாலா,
👉 420 பீடா உள்ளிட்ட
போதைப் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருவதாக நகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோதண்டபாணியை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS