சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…!
தென்காசி | நகர பாதுகாப்பு
தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,
சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,
பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்
விபத்து அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள,
பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளியில் உள்ள தனியார் கிணறு,
குழந்தைகள் தவறி விழும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இந்த அபாயங்களை சுட்டிக்காட்டி,
எஸ்டிபிஜ கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில்
நகர்மன்ற தலைவர் திரு. சாதிர் அவர்களிடம்
கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்ற நகர்மன்ற தலைவர்,
👉 காங்கிரீட் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
விரைவில் பணிகள் தொடங்கப்படும்,
👉 கிணற்றைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய
உரிமையாளரிடம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
உறுதியளித்தார்.
விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை –
அதுவே உண்மையான குழந்தைகள் பாதுகாப்பு.
மாவட்ட தலைமை செய்தியாளர்
ஜே. அமல்ராஜ்
தென்காசி

