Sat. Jan 10th, 2026

தருமபுரி | ஜனநாயக செய்தி

தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தச் சிறப்பு முகாம்களை,தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான முனைவர் பி. பழனியப்பன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது,
👉 18 வயது பூர்த்தி செய்த இளைஞர்கள்,
👉 முதல் முறையாக வாக்களிக்க உள்ள மாணவர்கள்,
👉 வேலை / கல்வி காரணமாக முகவரி மாற்றம் செய்தவர்கள்

யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாத வகையில்
பணிகளை துரிதமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

🎯 இளைஞர்களுக்கான முக்கிய அறிவுரை

✔️ புதிய வாக்காளர் சேர்க்கை

✔️ பெயர், பிறந்த தேதி பிழை திருத்தம்

✔️ முகவரி மாற்றம்


இப்போது செய்தால் – நாளைய ஜனநாயகம் வலுப்படும்
என இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

🤝 உடனிருந்த கழக நிர்வாகிகள்

இந்த ஆய்வின் போது,
தருமபுரி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சக்திவேல்,
மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சக்திவேல்,
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முனுசாமி உள்ளிட்ட
கழக நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும்
கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.

🔥 இளைஞர் வாக்கே மாற்றத்தை உருவாக்கும்

🔥 ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலம்

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS