Mon. Apr 13th, 2026

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்!

20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…
இது சாதனை இல்லை!
👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று.

பெயர்: D. Roopa Moudgil
பதவி: IPS
அடையாளம்: “அடங்காத அதிகாரி”

🚨 முதலமைச்சரையே கைது செய்த துணிவு!

உமா பாரதி மீது வாரண்ட்.
அதிகாரிகள் தயக்கம்.
ஆனால் ரூபா?

👉 நேராக சென்று கைது!

அந்த நாள் நிரூபித்தது:
சட்டம் மேலா? அரசியல் மேலா?

💣 சசிகலா சிறை வெடிப்புகள்…?
சிறையில்:

சொகுசு வாழ்க்கை

தனிச்சமையலறை

கோடி ரூபாய் லஞ்சம்

👉 யார் வெளிச்சம் போட்டார்? ரூபா!
👉 யாருக்கு தண்டனை கிடைத்தது? ரூபாவுக்கே!

✔️ ரிசல்ட்: டிரான்ஸ்பர்

🔁 40 டிரான்ஸ்பர் – சிஸ்டமா? சதியா?

ஒரு அதிகாரி உண்மையை பேசினால்:
➡️ டிரான்ஸ்பர்
ஊழலை எதிர்த்தால்:
➡️ டிரான்ஸ்பர்
அரசியல்வாதிகளைத் தொடினால்:
➡️ டிரான்ஸ்பர்

👉 அப்படின்னா கேள்வி:
இந்த நாட்டில் நேர்மையாக வேலை செய்யலாமா?

⚠️ “அடக்க முடியாதவளை அலைக்கழி” – இதுதான் ஃபார்முலாவா?

ரூபா:

FIR போட தயக்கம் இல்லை

VIP என்றாலும் விலக்கு இல்லை

லஞ்சத்திற்கு ZERO டாலரன்ஸ்

👉 இதுதான் பிரச்சனை!

ஊழல் சிஸ்டத்துக்கு இந்த அதிகாரி ஒரு “அபாயம்”

🎯 சமீப சர்ச்சை….?

Rohini Sindhuri உடன் மோதல் பேசப்படுகிறது.

ஆனால் முக்கிய கேள்வி…?
👉 ரூபா மாதிரி அதிகாரிகளை இந்த அமைப்பு சகிக்கிறதா?

🔥 இறுதியாக ஒரு சந்தேகம்…?

👉 “நேர்மையான அதிகாரி”
இந்த நாட்டில் ரோல் மாடலா?
அல்லது
Warning Boardஆ?

👉 40 டிரான்ஸ்பர் ஒரு மெசேஜ்:
“அமைதியா இரு… இல்லனா அலைந்து திரி!”

சமூக ஊடகங்களில் பிரபலமான பதிவுகள்:

“உண்மை பேசினா டிரான்ஸ்பர்…
ஊழலை பிடிச்சா டிரான்ஸ்பர்…
அப்படின்னா இந்த நாட்டில் நேர்மைக்கு சம்பளம் என்ன?”

செய்திச் சுருக்கம்:

⚖️ 20 ஆண்டுகளில் 40 இடமாற்றங்கள்: நேர்மையின் சின்னமாக திகழும் டி. ரூபா IPS.

இந்திய காவல்துறையில் பெண்கள் சாதனை படைப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால், ஆணாதிக்கம் நிறைந்த அமைப்பின் மையத்திலேயே நேர்மையும் துணிச்சலும் கொண்டு தனித்த அடையாளம் பதித்தவர் D. Roopa Moudgil.

2000களின் தொடக்கத்தில் சேவையில் இணைந்த அவர், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆண்டுக்கு சராசரியாக இரண்டு முறை மாற்றப்பட்ட இந்தப் பணியியல் பயணம், இந்திய நிர்வாக அமைப்பில் நேர்மையான அதிகாரிகள் சந்திக்கும் சவால்களை வெளிக்கொணர்கிறது.

🚨 முதலமைச்சர் கைது: தேசிய கவனம் ஈர்த்த சம்பவம்…!

2004ஆம் ஆண்டு, தர்வாட் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியபோது, Uma Bharti மீது நிலுவையில் இருந்த பிடிவாரண்ட் அடிப்படையில், அவர் இருந்த மாநிலத்திற்கே சென்று கைது செய்தது ரூபாவின் தைரியத்தை வெளிப்படுத்தியது.
ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி, பதவியில் இருந்த முதலமைச்சரையே கைது செய்த இந்த நடவடிக்கை, அவரை தேசிய அளவில் கவனத்திற்கு கொண்டு வந்தது.

🏛️ சசிகலா சிறை சர்ச்சை: அதிரடியான வெளிப்பாடு…?

பின்னர் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் DIG ஆக இருந்தபோது, V. K. Sasikala குறித்து முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டார்.

சிறையில் தனிச்சமையலறை

சொகுசு வசதிகள்

உயர்மட்ட லஞ்ச பரிமாற்றம் (₹2 கோடி வரை)

இவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய அவரது அறிக்கை, நாட்டிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்திற்கு பிந்தைய உடனடி விளைவு — இடமாற்றம்.

🔁 இடமாற்றங்களின் அரசியல்….?

ரூபாவின் சேவைக்காலம் முழுவதும் இடமாற்றங்கள் தொடர்ந்தன.
அவரது பணியியல் பாணி:

செல்வாக்கு மிக்கவர்கள்மீது வழக்குகள் பதிவு

அரசியல் அழுத்தங்களுக்கு பணியாத நிலை

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்

இதனால், அதிகார அமைப்புக்குள் எதிர்ப்புகளும் உருவானதாக கூறப்படுகிறது.

🎭 பல்திறமைகள் கொண்ட அதிகாரி….?

அவர் ஒரு கடுமையான காவல் அதிகாரி மட்டுமல்ல:

பரதநாட்டியக் கலைஞர்

கர்நாடக இசைப் பாடகி

“நான் யாருடைய நற்பெயரையும் காக்க பணியாற்றுவதில்லை” என்ற அவரது நிலைப்பாடு, இளம் பெண்களுக்கு ஒரு வலுவான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

🧭 நேர்மை…உண்மை கேள்விக்குறி….?

நேர்மையான அதிகாரிகளுக்கு இடமாற்றமே “பரிசா”?
20 ஆண்டுகளில் 40 முறை மாற்றுவது —
ஒரு அதிகாரியின் செயல்திறனை கட்டுப்படுத்தும் அமைப்புசார்ந்த அழுத்தமா?

⚠️ சமீப சர்ச்சைகள்:

அண்மையில் Rohini Sindhuri உடனான கருத்து மோதலும் விவாதத்திற்குள்ளானது.
ஆனால், ரூபாவின் கடந்த கால சேவையும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

🎈 இறுதியாக, இந்திய திரு நாட்டின் தற்போதைய சிக்கல்…? கல்வியையும், இதில் தேர்ந்தவர்களுக்கும் மரியாதை இல்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…?

✍️ இணை ஆசிரியர்

ஷேக் முகைதீன்

By TN NEWS