பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான நிலை உருவாகியுள்ளது.
நிழற்குடையா? கழிவுநீர் குட்டையா? – துர்நாற்றத்தில் தவிக்கும் பயணிகள்…?
பேருந்து நிலைய கடைகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர் பயணியர் நிழற்குடையின் உள்ளேயே தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் பெண்கள், முதியோர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அனுமதியற்ற பூக்கடைகள் ஆக்கிரமிப்பு – பயணிகளுக்கு அசௌகரியம்.
பயணியர் நிழற்குடையை முழுமையாக ஆக்கிரமித்து, அரசு அல்லது பேரூராட்சி அனுமதி இன்றி செயல்பட்டு வரும் பூக்கடைகள் காரணமாக,
நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாமலும்,
வெயிலில் வாட வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அனுமதியற்ற கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
NO PARKING தடுப்புகள் உடனடியாக அமைக்க வேண்டும்:
பயணியர் நிழற்குடையை சுற்றி NO PARKING தடுப்புகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றும்,
இனி எந்த வாகனமும் நிழற்குடை பகுதிக்குள் நிறுத்தப்படாத வகையில் காவல்துறை கண்காணிப்பு அவசியம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி + காவல்துறை – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்:
பயணிகளின் அடிப்படை உரிமையான
✔ நிழலில் நிற்கும் உரிமை
✔ சுத்தமான சூழலில் காத்திருக்கும் உரிமை
✔ பாதுகாப்பான பேருந்து நிலையம்
இவற்றை உறுதி செய்ய சின்னசேலம் பேரூராட்சி நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

