Sat. Feb 14th, 2026

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செலுத்தல்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000 இன்று (பிப்.13) வரவு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும், நிதி வழங்கலையும் வரவேற்று நன்றி தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்தில் பட்டாசு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், சிதம்பரம் மேல வீதி மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மகளிர் நலனுக்கான இத்திட்டம் குடும்ப பொருளாதாரத்திற்கு பெரும் ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நகர காங்கிரஸ் தலைவர் தலைமையில் நிகழ்ச்சி.

இந்நிகழ்விற்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான தில்லை. மக்கீன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என். ராதா வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்பு.

குமராட்சி வட்டார தலைவர் பகவத்சிங், மாவட்ட செயலாளர் நெல்சன்,
மகளிர் அணி மாவட்ட தலைவர் அஞ்சம்மாள்,
மகளிர் அணி மாவட்ட செயலாளர் தில்லை செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் நலத் திட்டத்திற்கு பாராட்டு.

சிறப்பு அழைப்பாளராக பி.பி.கே. சித்தார்த்தன், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அவர் பேசுகையில், “மகளிர் பொருளாதார சுயமரியாதையை உறுதி செய்யும் இந்தத் திட்டம் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்” எனக் கூறினார்.

செய்தியாளர் : சிவகுமார் – சிதம்பரம்

By TN NEWS