Sun. Apr 19th, 2026

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

Apr 18, 2026

தேதி: 18-04-2026
இடம்: சென்னை

🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴

இப்போது நாட்டில் மீண்டும் முன்வைக்கப்படும் தொகுதி மறுவரையறை (Delimitation) விவாதம், சாதாரண நிர்வாக மாற்றமல்ல. இது இந்தியாவின் அதிகார அமைப்பையே மாற்றக்கூடிய ஒரு அரசியல் திருப்புமுனை.

1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை “freeze” செய்தது ஏன்? மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக. அதுவே சமச்சீர் கூட்டாட்சி (federal balance) பாதுகாக்கப்பட்டது.

ஆனால் இன்று, “எந்த ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாக எடுத்துக்கொள்வது பாராளுமன்றம் தீர்மானிக்கும்” என்ற சட்ட மாற்றம் மூலம், அந்த பாதுகாப்பு சுவர் உடைக்கப்படுகிறது.

🔴இதன் அபாயம் எங்கு இருக்கிறது?

இன்று தமிழ்நாட்டின் மக்களவை பிரதிநிதித்துவம் 39/543 — சுமார் 7.2%.
நாளை அது 49 ஆக உயர்ந்தாலும், மொத்தம் 846 ஆக அதிகரித்தால், அது வெறும் 5.8% ஆக குறையும்.

🔴அதாவது — எண்ணிக்கை அதிகரிக்கிறது, ஆனால் அதிகார பங்கு குறைகிறது.

இதற்கே எதிராகவே  எச்சரிக்கை விடுக்கிறார்.
இதைப் புரிந்துகொள்ளாமல், “49 seats கிடைக்கும்போது ஏன் எதிர்ப்பு?” என்று கேட்பது, அரசியலை எண்களால் மட்டும் பார்க்கும் ஒரு மேற்பரப்பு அணுகுமுறை.

🔴மறுபுறம், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கிய மாநிலங்கள் — குறிப்பாக வட இந்திய மாநிலங்கள் — இந்த மாற்றத்தால் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைப் பெறும். அதன் விளைவாக, தேசிய அரசியல் முடிவுகளில் அவர்கள் decisive power பெறுவார்கள்.

நாளை ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கவோ, ஒரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றவோ, தென் மாநிலங்களின் ஆதரவு அவசியமில்லாத நிலை உருவானால் — அது இந்திய கூட்டாட்சியின் சமநிலையை சிதைக்கும்.

🔴இது வெறும் “தொகுதி மறு வரையறை” அல்ல.
இது அதிகாரம் யாரிடம் செல்வது? என்ற அடிப்படை கேள்வி.🔴

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வளர்ச்சி, கல்வி, மக்கள் தொகை கட்டுப்பாடு போன்ற துறைகளில் முன்னிலை வகித்ததற்கான “reward” கிடைக்க வேண்டுமா? அல்லது அதற்கே எதிராக “penalty” விதிக்கப்பட வேண்டுமா?

இந்த கேள்விக்கு அரசியல் பதில் தேவை. அதற்காகத்தான் இந்த விவாதம் இன்று தீவிரமடைகிறது.

“அதிக seats கிடைக்கிறது” என்ற மாயையை விட்டு வெளியே வந்து,
“எவ்வளவு அதிகாரம் கிடைக்கிறது?” என்ற உண்மையான கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இது.

🚫🚫 தமிழ்நாடு மக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட மிகவும் சிந்தித்து, நமது நாடு, நமது இனம், நமது மொழி மற்றும் நமது உரிமைகளை என்றும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக ஒன்றுபட்டு போராடி நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்.🔴🔴

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS