Sat. Apr 18th, 2026

புதுடெல்லி, ஏப். 17:
மக்களவையில் இன்று கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதா வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவானன. இருப்பினும், தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.

மொத்தம் 489 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்ற தேவையான உயர்ந்த அளவிலான பெரும்பான்மை (சிறப்பு பெரும்பான்மை) கிடைக்காததே தோல்விக்குக் காரணமாகும். அரசியல் அமைப்பு திருத்தம் சார்ந்த மசோதாவாக இருந்ததால், சாதாரண பெரும்பான்மை மட்டுமின்றி கூடுதல் ஆதரவு அவசியமாக இருந்தது.

இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த நிலையில் வாக்களித்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த பல கட்சிகள், தொகுதி மறுவரையறை நடைமுறைகள் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற காரணத்தால் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.

அரசு தரப்பில், இந்த மசோதா மக்கள் தொகை அடிப்படையில் சமநிலை பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக விளக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள், இது சில மாநிலங்களுக்கு அரசியல் பாதிப்பை உருவாக்கும் என்று குற்றம்சாட்டின.

மசோதா தோல்வியடைந்ததன் மூலம், தற்போதைய தொகுதி அமைப்பு தொடரும் நிலையில் உள்ளது. இது அரசியல் ரீதியாக முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வரும் நாட்களில் அரசியல் தரப்பில் மேலும் விவாதங்களும், புதிய முயற்சிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஷேக் முகைதீன். இணை ஆசிரியர்

By TN NEWS