Sun. Mar 22nd, 2026

காட்பாடி | ஜனவரி 29

சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

காலை 10.30 மணியளவில் காட்பாடி காந்திநகர்  கங்கேயநல்லூர் சந்திப்பு சாலையிலிருந்து புறப்பட்ட இந்த பேரணியை, காட்பாடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விஜியகுமார் தொடக்கி வைத்தார்.

சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமத்தின் டாக்டர் அ.மு. இக்ராம் மற்றும் காட்பாடி ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. பாரிவள்ளல், ஆர்ஐசிடி கல்வி நிறுவன இயக்குநர் டாக்டர் கே.எஸ். அசரப், போக்குவரத்து காவல் குழும செயலாளர் ஆர். சீனிவாசன், துணைச் செயலாளர் பி.என். ராமச்சந்திரன், காட்பாடி ரெட் கிராஸ் துணைத் தலைவர் ஆர். விஜயகுமாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், காட்பாடி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உமாசங்கர், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பரத், டாக்டர் வீ. தீனபந்து, பொருளாளர் வி. பழனி, தணிகை செல்வம், டீகாராமன் பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி காந்திநகர் கல்யாண மண்டபம் அருகிலிருந்து புறப்பட்டு, சில்க் மில் சாலை சந்திப்பு, ஓடைபிள்ளையார் கோயில் சாலை சந்திப்பு, அக்சிலியம் கல்லூரி சாலை சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் கல்யாண மண்டபம் சந்திப்பில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்:
“சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு”,
“தலைக்கவசம் அணிவோம், நம் உயிரை பாதுகாப்போம்”,
“சாலை விதிகளை மதிப்பேன், உயிர் இழப்பை தடுப்பேன்”,
“சாலை சாகசம் செய்வதற்கல்ல”
என விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

பேரணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

தி. தென்பாண்டியன்
வேலூர் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS