Sun. Mar 22nd, 2026

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும் வழிமாற்று ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.

🔁 மலைக்கோவில் செல்லும் வழிமாற்றம்

கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தேவர்சிலை – சன்னதி ரோடு வழி மாற்றப்பட்டு,
👉 கொடைக்கானல் ரோடு (Gate No.1)
👉 தேவஸ்தான பேருந்து நிலையம் (Gate No.2)
வழியாக பக்தர்கள் வரிசையில் சென்று குடமுழக்கு மண்டபம் வழியாக மலைக்கோவிலை அடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

🚶‍♂️ கிரிவீதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை

பாதவிநாயகர் கோவில், கிரிவீதி சுற்றுதல் – எந்த தடையும் இல்லை

தரிசனம் முடித்து மலை இறங்கும் பக்தர்கள், கிரிவீதியில் உள்ள எல்லா பாதைகளையும் பயன்படுத்தி தங்கள் வாகன நிறுத்த இடங்களை அடையலாம்.


🚌 பேருந்து போக்குவரத்து மாற்றம்

வெளியூர் & சிறப்பு பேருந்துகள் → APA கல்லூரி தற்காலிக பேருந்து நிலையம்

உள்ளூர் டவுன் பேருந்துகள் → வ.உ.சி பேருந்து நிலையம்


🚍 முக்கிய வழித்தடங்கள்:

திண்டுக்கல் / மதுரை வழி பேருந்துகள்
👉 மூலச்சத்திரம் – ஒட்டன்சத்திரம் – மானூர் பைபாஸ் – பாலாஜி மில் – BVB School – இராமநாதநகர் – APA கல்லூரி

கோயம்புத்தூர் / திருப்பூர் / உடுமலை / தாராபுரம் வழி பேருந்துகள்
👉 மானூர் பைபாஸ் – பாலாஜி மில் – BVB School – இராமநாதநகர் – APA கல்லூரி


🆓 இலவச சிறப்பு பேருந்துகள்

பக்தர்களின் வசதிக்காக 3 இலவச சுற்று பேருந்துகள்
👉 சண்முகநதி – BVB School – கோசாலை பேருந்து நிலையம் – வேல் ரவுண்டானா – மயில் ரவுண்டானா – ESI JN – சிவகிரிப்பட்டி – இடும்பன் குளம் – கொடைக்கானல் JN

🚗 வாகன நிறுத்த வசதி (Parking)

நீதிமன்றம் (கிழக்கு/தெற்கு), RVS மஹால், மயிலாடும்பாறை, RTO, LIC அலுவலகம், இடும்பன் குளம்,
ஆவின் பால்பண்ணை, சித்திரை அபார்ட்மெண்ட், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
தேவஸ்தான & கோசாலை பேருந்து நிலையம், தேவர்சிலை பின்புறம் உள்ளிட்ட 13 இடங்களில் வாகன நிறுத்தம்.

⛔ போக்குவரத்து கட்டுப்பாடுகள்

மயில் ரவுண்டானா → தேவர்சிலை / பாலாஜி ரவுண்டானா

வேல் ரவுண்டானா → திருஆவினன்குடி
➡️ பக்தர்களின் வாகனங்களுக்கு தடை
➡️ உள்ளூர் ஆட்டோக்களுக்கு அனுமதி


🗺️ QR Code & YOU ARE HERE Maps

கிரிவீதியை சுற்றி QR Code ப்ளக்ஸ் பேனர்கள்

முக்கிய சந்திப்புகளில் “YOU ARE HERE MAP”
➡️ Google Map மூலம் பக்தர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடையலாம்.

🙏 காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
📰 செய்தி: சித்ரா பிரகாஷ், திண்டுக்கல் மாவட்டம்

By TN NEWS