Sun. Mar 22nd, 2026

பழனி | ஜனவரி 29

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 501 மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P. செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

நிகழ்வில் பழனி வருவாய் கோட்டாட்சியர், அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சித்திர பிரகாஷ்
திண்டுக்கல் மாவட்ட நிருபர்

By TN NEWS