Sat. Jan 10th, 2026

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷

தேதி: 26/12/2025.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா நிலம், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புக்குப் பிறகும் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருப்பது, நிர்வாக அலட்சியமாகவும் நீதிமன்ற உத்தரவு மீறலாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

🔴1993 – பூங்கா நிலம் ஒதுக்கீடு | தானப்பத்திரம் மூலம் பேரூராட்சிக்கு ஒப்படைப்பு.

கோவை சரவணம்பட்டி பகுதியில் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.
இந்த நிலம், அதே ஆண்டில் தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், கோவை மாநகராட்சியாக மாற்றப்பட்டபோது, இந்த நிலம் மாநகராட்சியின் சொத்தாக கருதப்படுகிறது.

🔴13 சென்ட் நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு:

இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் இருந்து சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து,
👉 மதிற்சுவர் கட்டி,
👉 தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மாற்றியுள்ளதாக
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

🔴2021 – மாநகராட்சி நோட்டீஸ்:

இந்த ஆக்கிரமிப்பை கண்டறிந்த கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர், 2021 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பாளருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பினார்.
இதனை எதிர்த்து, ஆக்கிரமிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

🔴19.12.2025 – சென்னை உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், 19.12.2025 அன்று வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்து,
👉 பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு தெளிவான உத்தரவு வழங்கியுள்ளது.

🔴நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட நடவடிக்கை?

உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து,
மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்,
👉 பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றத் தயாராக இருந்த நிலையில்,
👉 திடீரென நடவடிக்கையை நிறுத்த உத்தரவு வந்ததாக
தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளர் எஸ்.பி. தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

🔴“OSR நிலங்களை மாற்ற முடியாது” – நீதிமன்றங்களின் நிலைப்பாடு:

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“திறந்த வெளி ஒதுக்கீட்டு (OSR) நிலங்களை எந்தவிதத்திலும்
தனியார் பயன்பாட்டிற்கு மாற்ற முடியாது.
ஆக்கிரமிப்பு ஏற்பட்டால்,
உடனடியாக இடித்து மீட்க வேண்டும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ளன.
ஆனால், இங்கு அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்றார்.

🔷பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்:

1. 13 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள மதிற்சுவரை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்


2. மீதமுள்ள 37 சென்ட் பூங்கா நிலத்தை மாநகராட்சி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்


3. முழு 50 சென்ட் நிலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பூங்காவாக உருவாக்க வேண்டும்

🔷ஆணையருக்கு புகார் – சட்ட நடவடிக்கை கோரிக்கை:

இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
👉 நீதிமன்ற தீர்ப்பை மதித்து,
👉 உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி,
👉 பூங்கா நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விக்னேஷ்வர்
Tamilnadu Today News

By TN NEWS