விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு.
📍 கள்ளக்குறிச்சி மாவட்டம்.
விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள் கட்டணக் கழிப்பறையாக மாற்றி காசு வசூல் செய்வதாக விவசாயிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த விற்பனைக்கூடத்திற்கு தினசரி விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் விவசாயிகள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தனர்.
🏛️ அரசின் முயற்சி – விவசாயிகளின் நம்பிக்கை…!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது,
➡️ “விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை” என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து,
✔️ விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு
✔️ இலவசமாக பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதி கட்டி வழங்கப்பட்டது.
⚠️ அதிர்ச்சி குற்றச்சாட்டு – கட்டண வசூல்.
ஆனால் தற்போது,
கழிப்பறை சில மர்ம நபர்களின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளதாகவும்
பயன்படுத்த ஒரு நபருக்கு ரூ.10 வசூல் செய்யப்படுவதாகவும்
பணம் தர மறுத்தால் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
➡️ இது ஏழை, சிறு விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார சுமையாக மாறியுள்ளது.
📝 மனுக்கள் – நடவடிக்கை இல்லை.
இந்த முறைகேடு குறித்து,
மாவட்ட நிர்வாகம்
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்
என பலரிடமும் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
🚧 போராட்ட எச்சரிக்கை…?
இந்த நிலை தொடர்ந்தால்,
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்
என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
➡️ இதனால் விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📢 விவசாயிகளின் கோரிக்கை.
✔️ இலவச கழிப்பறையை உடனடியாக விவசாயிகள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்
✔️ சட்டவிரோத வசூலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
✔️ அரசின் நலத்திட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் கண்காணிக்க வேண்டும்
✍️ வ. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி