ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,
மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11 மேல் தளக் கடையை கடந்த 2004ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்ததாக தெரிவித்தார்.
இந்த ஆண்டிற்கான ஆறு மாத கடை வாடகையை முறையாக செலுத்தியிருந்தும், “வாடகை செலுத்தவில்லை” என தவறான காரணம் கூறி தமக்கு கடை அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 5% ஒதுக்கீடு அடிப்படையில் பேரூராட்சி கடைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு நடைமுறையில் இல்லை என்றும், இது தொடர்பான ஜிஓ நகலை செயல் அலுவலருக்கு அனுப்பிய போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், சின்னசேலம் பேரூராட்சியில் கடைகள் முறையான விதிமுறைகளின்படி ஏலத்திற்கு விடப்படவில்லை என்பது பொதுமக்களுக்கும் தெரிந்த உண்மை என்றும், இந்த ஏல நடைமுறையில் பல தில்லுமுல்லுகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆறு மாத வாடகை செலுத்த அவகாசம் கேட்டபோதும், தனது உடல்நிலையை காரணமாகக் கொண்டு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சென்னை பேரூராட்சி இயக்குனர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், தேவையானால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
தன்னைப் போல மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என அவர் வலியுறுத்தினார்.
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5% ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு.
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
Tamil Nadu Today
கள்ளக்குறிச்சி மாவட்டம்
