Thu. Feb 5th, 2026

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.

குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, அதே பகுதியில் மனிதக்கழிவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தொற்று நோய் பரவும் அச்சம் – மக்கள் எதிர்ப்பு.

மனிதக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரம் மாசடையும் என்றும், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்றும் கூறி, இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.

இதனைத் தொடர்ந்து
கடலூர்–சேலம் தேசிய நெடுஞ்சாலை
உள்ள நயினார் பாளையம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை – போராட்டம் வாபஸ்.

தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து, தற்காலிகமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தொடங்கப்படாது என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.


செய்தி : கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS