Tue. Jul 22nd, 2025

விருதுநகர்:

பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது.

பத்திர பதிவு துறை பெண் அதிகாரிகள்:

அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை உள்ளது.. இதில், சில பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி கைதாகி, மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்கள்.

திருவண்ணாமலை: புதிய ரேஷன் கார்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிக்க, 3 ஆயிரம் கேட்டுள்ளார் வட்ட வழங்கல் அலுவலர் சுமதி..?

இவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். வரும் ஜனவரி 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இப்படியொரு புகாரில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்..?

திருவண்ணமலை: மின்சார வாரியம்:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்ஊழியர்  சிக்கியிருக்கிறார்..?

தெருவிளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு, மின் இணைப்பு பெறவேண்டி, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிர்வாக பொறியாளருக்கு ராமகிருஷ்ணன் என்பவர் விண்ணப்பித்துள்ளார்.. இதுகுறித்து சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் கேட்டதற்கு, 6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். தற்போது இவரும் கைதாகி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் VOவுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துள்ளது..?

அதாவது ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள டிமானகசேரியில் V.O வாக பணியாற்றியவர் அம்மையப்பன்…?

இவர் கடந்த 2010ம் ஆண்டு, வாரிசு சான்று வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியிருக்கிறார் விருதுநகர் V.O. புகாரின்பேரில், அம்மையப்பனை விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் கைது செய்தனர்..!

இது தொடர்பான வழக்கில் 2019-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் 3 வருட சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அம்மையப்பன், மதுரை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார். இந்த மனுவை தற்போது விசாரித்த நீதிமன்றம், அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது.

சர்வேயர்: விவசாயிகளிடம் லஞ்சம்:

சில நாட்களுக்கு முன்பு கூட, விழுப்புரம் மாவட்டத்தில் 2 நில அளவையாளர்கள்(SURVEYOR ) லஞ்ச புகாரில் சிக்கியுள்ளார்கள்…?

மேல்மலையனுார் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை அளவீடு செய்ய அணுகியபோது, மேல்மலையனுார் தாலுகா அலுவலக சர்வேயர்கள், இடைத்தரகர் மூலம் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். இது குறித்து குமாரின் மருமகன் மாணிக்கம், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கவும், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், தாலுகா அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மாணிக்கம், சர்வேயர்களிடம் தந்த போது, புரோக்கர் சரத்குமாரிடம் தருமாறு சொன்னார்கள்..

அங்கிருந்த புரோக்கர் சரத்குமாரிடம் இருந்து  பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார், புரோக்கர் சரத்குமார், 28, தலைமை சர்வேயர் தங்கராஜ் (37) லைசன்ஸ் சர்வேயர் பாரதி (32) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து தமிழக மக்களின் கோரிக்கை:

நம்பிக்கையின் அடிப்படையில் புதிய அரசு அமைந்தால் பாதுகாப்பு மற்றும் லஞ்சம் இல்லா தமிழ்நாடு அமையும், மக்கள் நிம்மதியாக அரசு சம்பந்தப்பட்ட தேவையான அடிப்படை உரிமைகள் பெறமுடியும் என வாக்களித்தோம். ஆனால் எந்த அரசியல் கட்சியும் நேர்மையான ஆட்சி செய்ய முடியாது என நிரூபிக்கப்பட்டுள்ளது, இது மக்களுக்கு ஆட்சியாளர்கள் செய்யும் நம்பிக்கை துரோகம். மற்றும் அதிக சம்பளம் மற்றும் வசதியான சூழலை அரசு அமைத்து தந்தாலும் பணத்தின் மீது பேராசை கொண்டு அரசாங்க ஊழியர்கள் மக்களை சிரமப்படுத்துகிறார்கள் மற்றும் லஞ்சம் தரவில்லை எனில் அழைகழிக்கப் படுகிறார்கள். இதில் பெண் அதிகாரிகள் உடன் படுகின்றனர் எனும் போது மிகவும் வேதனையான உண்மை என்று தனது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு டுடே கண்டனம்:

தமிழ்நாடு டுடே இந்த செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதோடு – அனைத்து அரசு அலுவலகங்களில் சுற்றி திரியும் புரோக்கர்களை முதலில் களை எடுத்தல் அவசியம். இந்த புரோக்கர்கள் நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் இலஞ்சம் முற்றிலுமாக நீக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.சேக் முகைதீன்.


By TN NEWS