Wed. Jul 23rd, 2025

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது.

இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வந்த காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளைப் பிடித்த திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம்.



அரவிந்த் 15 காளைகளை பிடித்து 2ஆம் இடம், முரளிதரன் 13 காளைகள் பிடித்து 3ஆம் இடம்.

*அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – டிராக்டர் முதல் பரிசு.*

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த காளைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசு.

சசிகலாவின் காளை வென்றதையொட்டி, அதன் வளர்ப்பாளர் மலையாண்டி முதல் பரிசை பெற்றார்.

இரண்டாம் பிடித்த காளை உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசு.

*அவனியாபுரம்: முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசு.*

ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதல் இடம் பிடித்த கார்த்திக்கு ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசு.

15 காளைகள் பிடித்து 2ஆம் இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு இரு சக்கர வாகனம் பரிசு.

சேக் முகைதீன்.

By TN NEWS