Tue. Jul 22nd, 2025

கடந்த செவ்வாயன்று துவங்கியது இந்த வனத்தீ.. லாஸ் ஏஞ்சலீசின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது. இது வரை பல conspiracy theories விவாதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த நெருப்பின் மூல காரணம் வனப்பகுதியில் கேம்பிங் சென்றோர் அணைக்காமல் விட்ட நெருப்பாக இருக்கலாம்.. அல்லது எதேச்சையாக யாரோ பற்ற வைத்ததாக இருக்கலாம் என்ற அளவில்தான் அமெரிக்க அரசு இது வரை சொல்லி வருகிறது.

இந்த catastrophic நெருப்பு சம்பவம் நடக்கையில் வேண்டலிசம் ( vandalism ) என்று கூறப்படும் கொள்ளையடித்தல் நடந்த படிதான் இருக்கிறது. சில வேண்டலைசர்கள் வேண்டுமென்றே சில இடங்களில் நெருப்பை பற்ற வைக்க முயன்றதும். அவர்களில் சிலரை பொதுமக்களே கைது செய்து போலீசிடம் ஒப்படைத்ததுமான சம்பவங்களும் நடந்தபடி இருக்கின்றன.

எப்போது நடந்தது? எங்கே நடந்தது? என்று குறிப்பிடாமல் சில கறுப்பினத்தவர் சில இடங்களில் தீ வைக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றவாளியாக்கும் strategies துவங்கி இருக்கின்றன.

எட்டு நாட்களானாலும் இந்த நெருப்பு இன்னும் அணையவில்லை. அணைக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த வனத்தீயின் பிரம்மாண்டம் மானுட முயற்சிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இரண்டாவது அமெரிக்க அரசின் மெத்தனம். இவை இரண்டும்தான் இந்த பேரழிவு இப்போது வரை கன்டெயின் செய்ய முடியாமல் இருப்பதற்கான காரணம். இந்த நிமிடத்தில் கிட்டத்தட்ட எண்பதாயிரம் மக்கள் கேம்ப்புகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் எண்பத்தெட்டாயிரம் பேருக்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களது வீடுகளை காலி செய்ய வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை கொடுத்து தயார் நிலையில் இருக்கும்படி எச்சரித்திருக்கிறார்கள்.

இது வரை எரிந்து அழிந்த சொத்துகளின் மதிப்பை அன்றாடம் குத்து மதிப்பான மதிப்பீடு செய்து அறிவித்தபடி இருக்கிறார்கள். நேற்று வந்த பத்திரிகையின் அறிவிப்பின்படி இது வரை சேதமான சொத்துகளின் மதிப்பு இருநூற்று எழுபத்தைந்து பில்லியன் டாலர்கள் இருக்கலாம் என்கிறார்கள். இது மேலும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் முழுக்க முழுக்க நெருப்பு கட்டுக்குள் வந்தபிறகு ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்கையில் தான் உண்மையான சேதத்தின் அளவு தெரியும். இப்போது வருபவை எல்லாம் குத்து மதிப்பானவை தான்.

நான் ஏற்கெனவே சொன்னது போல ஐநூறு முதல் எண்ணூறு பில்லியன் டாலர்கள் வரை சேதம் இருக்கக் கூடும் என நினைக்கிறேன். குறைந்த பட்சம் ஐநூறு மில்லியன் டாலர்கள் என்றாலே இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட நாற்பத்து மூன்று லட்சம் கோடி ரூபாய் வரக் கூடும். அதாவது இந்திய ஒன்றியத்தின்.. ஒட்டு மொத்த இந்தியாவின் ஓர் ஆண்டு பட்ஜெட் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஏற்கெனவே கடும் நிதிச் சுமையால் தள்ளாடும் அமெரிக்க அரசுக்கு இது தாள முடியாத பேரிடி ஆகும். இதை அமெரிக்க அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே விலைவாசி ஏற்றம்.. பண வீக்கம். வேலையில்லா பிரச்சினை என்று தள்ளாடியபடி இருக்கும் அமெரிக்க மக்கள் மீது இந்த சுமை விடியும் என எதிர்பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு அமெரிக்க அரசு ஈடு தருமா என்பதும் கேள்விக்குறிதான். ஏற்கெனவே பல இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் நாங்கள் திவாலாகக் கூடும் என்று சொன்னபடி இருக்கின்றன.இப்போது வரை இந்த நெருப்பை அணைக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் தற்போது வீசி வரும் காலநிலைக் காற்று என்கிறார்கள். இந்த காற்றின் அதி பயங்கரமான வேகத்தால்தான் நெருப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விரிவடைந்தபடி இருக்கிறது. இந்த காற்றின் வேகம் இன்னும் குறையவில்லை. வானிலை அறிக்கைகளில் குறைந்தது நாளை (அதாவது இன்று புதன்கிழமை. அமெரிக்காவில் இன்னமும் செவ்வாய் கிழமைதான்) வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

ஆக சேதங்களும் அதிகரிக்கவே கூடும். இது வரை 24 உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் போன்ற பெரும் பணக்காரர்கள் அவரவர் வீடுகளை தீப்பற்ற இயலாத ரசாயனங்கள் தடவி காப்பாற்றி உள்ளனர். அது போன்ற ஒரு சில வீடுகள் தவிர மற்ற வீடுகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி விட்டன.காடுகள் எரிந்ததால் கானுயிர்கள் அனைத்துமே பலியாகி இருக்கின்றன. நெருப்பில் பாதி எரிந்து உயிர் வதையில் துடிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் நம் மனதை உலுக்குகின்றன.முக்கியமாக புவி வெப்பமயமாதலைத்தான் பெரும்பாலோர் காரணமாக சுட்டிக் காட்டுகிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய இயற்கைப் பேரிடர் கேத்தரின் புயல்தான். அதில் நிகழ்ந்த சேதாரம் 250 பில்லியன் டாலர்கள் தான். ஆனால் இந்த காட்டுத் தீ சம்பவமோ ஏற்கெனவே 275 பில்லியனை தாண்டி சேதம் போய்க் கொண்டிருக்கிறது.

கடைசியாக நம் மக்களுக்கு ஒரே ஒரு சேதி.

காசாவில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான தண்டனை தான் இது என்று நிறைய பேர் ஆறுதல் கொள்வதையும் காண முடிகிறது.

மத்திய கிழக்கின் ( Middle East ) அக்கிரமங்களுக்கு காரணம் அமெரிக்க மக்கள் அல்ல. அமெரிக்காவின் Deep State எனப்படும் கண்ணுக்குத் தெரியாத அதிகார மையங்கள் தான். அவை யூத கூட்டணிகள்தான். உலகமெங்கும் நடக்கும் அவ்வளவு தீவிரவாத செயல்கள் அனைத்துக்கும் இந்த யூத கூட்டணி மட்டுமே காரணமாகும்.

மத்திய கிழக்கு அநியாயங்களுக்கு எதிராக இந்த ஒரு வருடத்துக்கும் மேலான காலத்தில் விடாமல் தினந்தோறும் அங்கே நம் மக்களுக்கு ஆதரவாக போராடிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அமெரிக்க மக்களே!. இதன் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் சிறை தண்டனைகள்.. அரசு சித்திரவதைகள் எல்லாமே ஏராளம் ஏராளம். மத்திய கிழக்கு எதிர்த்து ஒரு அமெரிக்கன் உயிர் தியாகமே செய்திருக்கிறான்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து வருவதே இந்த அமெரிக்கர்களின் ஈர மனது போராட்டங்கள் தான். ஆக இந்த இழப்பை நாம் நமது போராடும் மக்களுக்கான இழப்பாகவே பார்க்க வேண்டும். இந்த இழப்பை வழமை போல அமெரிக்க அரசின் டீப் ஸ்டேட் புறக்கணிக்கும் அல்லது மேலும் அமெரிக்க மக்களை கஷ்டப் படுத்தும். ஆகவே இன்று நாம் அமெரிக்க மக்களின் பக்கமே நிற்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்🙏

நன்றி: திரு. K R Masilamani அவர்கள்.

நன்றி..( பேஸ்புக்கில்) நந்தன் ஸ்ரீதரன் அவர்கள்.

தொகுப்பு: சேக் முகைதீன்

By TN NEWS