தென்காசி மாவட்டம்:
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து, பாபநாசம் – அம்பை – சங்கரன்கோவில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில், பாபநாசம் – அம்பை இடைகால் – பாப்பாங்குளம் – பிள்ளையார் குளம் – ஏபி நாடானூர் – வள்ளியம்மாள்புரம் – வடமலைப்பட்டி – லட்சுமியூர் – மாதாபட்டணம் – கோவிலூற்று – பூலாங்குளம் – மேலகிருஷ்ணப்பேரி – செல்லத் தயார்புரம் – பெத்த நாடார்பட்டி – மகிழ்வண்ணநாதபுரம் – பாவூர்சத்திரம் – சுரண்டை – குலையநேரி – சேர்ந்தமரம் – வீரசிகாமணி வழியாக சங்கரன்கோவிலுக்கு ஒரு பேருந்தும்,
அதே மார்க்கத்தில் சங்கரன்கோவிலில் இருந்து பாபநாசம் நோக்கி மற்றொரு பேருந்தும் என இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
பின்னர் கடந்த ஆட்சி காலங்களில் இந்த இரண்டு பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, திமுக அரசு பொறுப்பேற்ற பின் 130-B என்ற பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது. எனினும், தற்போது அந்த பேருந்து ஒரு மார்க்கத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து சேவை 5 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. இதன் மூலம்
பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.
எனவே, தற்போது இயங்கிவரும் ஒரு மார்க்கத்துடன் இணைந்து, மற்றொரு மார்க்கத்திலும் கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சா.சி.சிவசங்கர்,
போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்து, பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது,
மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம்,
ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை,
மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

