Sat. Jan 10th, 2026

அரூர் | தருமபுரி மாவட்டம்:

திராவிட மாடல் அரசின் ஆட்சியில் இளைஞர்களின் உடல் நலம், விளையாட்டு திறன் மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அரூரில் “திராவிடப் பொங்கல்” விழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிரிக்கெட், வாலிபால், கபாடி போன்ற விளையாட்டு போட்டிகள், அறிவுசார் மையம் தொடக்கம், மற்றும் RO குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தப்படுகின்றன.

இளைஞர்களை விளையாட்டின் மூலம் ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் உடல் ஆரோக்கியம் நோக்கி வழிநடத்தும் வகையில் நடைபெறும் இந்த போட்டிகள், கிராமப்புற இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து,
அரூரில் அறிவுசார் மையத்தைத் திறந்து,
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, பேருந்து நிலையத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து RO குடிநீர் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி சிறப்பிக்க உள்ளார்.

விளையாட்டு மற்றும் கல்வி வாயிலாக இளைஞர்களை முன்னேற்றும் இந்த முயற்சி, திராவிட மாடல் அரசின் “இளைஞர் நலம் – சமூக முன்னேற்றம்” என்ற கோட்பாட்டை பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில்,
கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள்,
சார்பு அணி பொறுப்பாளர்கள்,
இளைஞர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள்
அனைவரும் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS