சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை:
தென்காசி – செங்கோட்டை:
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினமும் 500-க்கும் அதிகமான கனரக லாரிகள் கனிம வளங்களை ஏற்றி சென்று வருகின்றன. இந்த அதிகப்படியான லாரி போக்குவரத்து காரணமாக சபரிமலை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மலை S-வளைவு பகுதியில் அடிக்கடி நெரிசல்:
செங்கோட்டை , புளியரை பகுதி மலைப்பாதையாக இருப்பதால், குறிப்பாக S-வளைவு இடங்களில், லாரிகள் பழுது அடைந்தால்,அல்லது ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்தால், பல கிலோமீட்டர் நீளத்திற்கு வாகன நெரிசல் உருவாகி வருகின்றது. மருத்துவ அவசர தேவைகள் பாதிப்பு இந்த நெரிசலால் மருத்துவ சேவைக்காக அவசரமாக செல்ல வேண்டியவர்கள், திருவனந்தபுரம் விமான நிலையம் புறப்பட வேண்டிய பயணிகள் கடுமையான அவதியிலும் தாமதத்திலும் சிக்கி வருகின்றனர்.
பக்தர்களும் அமைப்புகளும் ஒருமித்த கோரிக்கை.
சபரிமலை சீசன் முடியும் வரை கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என: இயற்கை வள பாதுகாப்பு சங்கம்
சபரிமலை பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள்என
எல்லோரும் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
புளியரை, செங்கோட்டை மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடு, மாற்று நேர நிர்ணயம் அல்லது தற்காலிக தடை என ஏதாவது ஒருதீர்மானம் எடுத்து, சபரிமலை சீசனில் பக்தர்களுக்கு பாதுகாப்பான, தடையற்ற பயணம் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துகின்றனர்.
📌 செய்தியாளர்:
அமல் ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் – தமிழ்நாடு டுடே
