தருமபுரி | நவம்பர் 23, 2025
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60), தருமபுரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள புழுதிக்கரை ஊராட்சியின் C.மோட்டுப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 31-இல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வருகின்றன.
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் P. பழனியப்பன் அவர்கள் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை 100% முடிக்க BLO, BDA ஆகியோருக்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம் என கேட்டுக்கொண்டார். ஒன்றிய கழக செயலாளர் Dr. P. பிரபு ராஜசேகர், மாவட்ட அவை தலைவர் மனோகரன், பொது குழு உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

