Sun. Dec 21st, 2025

தர்மபுரி: காரிமங்கலம் வள்ளல் காரி அரிமா சங்கம் – விஜியா மருத்துவனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வள்ளல் காரி அரிமா சங்கம் சார்பிலும் தர்மபுரி விஜியா மருத்துவனை இணை ஏற்பாட்டிலும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று (23.11.2025) சிறப்பாக நடைபெற்றது.

முகாமில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் C. பெரியசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல்நல பரிசோதனைகள் செய்து, மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்று சென்றனர்.

இலவசமாக பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கப்பட்டமைக்கு உள்ளூர் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு டுடே செய்தியாளர்

By TN NEWS