உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருந்தை கிராமம், பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலை, நடைபாதை, பாதுகாப்பான செல்லும் வழி என எதுவுமே இல்லாத நிலையில், கிராம மக்கள் தினமும் உயிரை பணயம் வைத்து நடந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது.
இந்த பிரச்சினையை பலமுறை உள்ளாட்சி நிர்வாகத்திடம் எடுத்துச் சொன்ன போதும்,
“நீங்கள் என்ன சொல்வது… நாங்கள் என்ன செய்வது…”
என்ற பொறுப்பற்ற பதில்களே மக்களுக்கு கிடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்ட போதும்,
இதனை கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த ரங்கநாதன் அவர்களின் வீடு செல்லும் வழி,
மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.
அந்த வழியாகத்தான் துக்கம் விசாரிக்க வருபவர்களும்,
ஊர் மக்கள் அனைவரும் கட்டாயமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இன்று காலை மட்டும்,
ஒரு குழந்தையும், ஒரு வயதானவரும் அந்த இடத்தில் வழுக்கி விழுந்துள்ளனர்.
அந்த அளவிற்கு சாலை மோசமான நிலையில் இருப்பதால்,
கால்நடைகள் கூட அந்த வழியாக செல்ல அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ரங்கநாதனின் உடல் இன்று இரவு 8 மணிக்கு கிராமத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அதற்குள்,
👉 உள்ளாட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?
👉 அல்லது உயிரிழப்புக்குப் பிறகும் அலட்சியமா?
என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏரியிலிருந்து வரும் போது வலது புறமாக முதல் தெரு மட்டுமல்ல,
இருந்தை கிராமத்தில் உள்ள பல தெருக்களும் இதே போன்ற அபாய நிலையில் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
📌 அதிகாரிகள் கவனத்திற்கு:
🔴 மாவட்ட ஆட்சியர் – கள்ளக்குறிச்சி
🔴 ஊரக வளர்ச்சி & ஊராட்சி ராஜ் துறை அமைச்சர் – தமிழ்நாடு அரசு
🔴 மாவட்ட ஊராட்சி நிர்வாகம்
🔴 வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) – திருநாவலூர்
மக்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை!
உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு,
🔹 அபாய சாலையை சீரமைக்க
🔹 தற்காலிகமாக பாதுகாப்பான நடைபாதை அமைக்க
🔹 கிராமத்தின் அனைத்து தெருக்களுக்கும் அடிப்படை வசதி வழங்க
அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி