Tue. Jul 22nd, 2025

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராடி வருகின்றனர்.

மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யும் உறுதியான அறிவிப்பை இந்த நிமிடம்வரை வெளியிடவில்லை.

எனவே போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்க்கும் வகையில் வருகின்ற பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்/ நகர வீதிகளில்/ கிராமங்களில்/ 2025 தை1 தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.

நாம் செய்ய வேண்டியவை:

👉மலைகளை ,விவசாயத்தை, பல்லுயுர்களை, தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வழிபாடுகளை, தொன்மங்களைக் குறிக்கும் கோலங்களை வரைந்து #வேண்டாம்#டங்ஸ்டன்


#BAN #TUNGSTAN

வேதாந்தாவே வெளியேறு!

மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட

வேளாண் பல்லுயிர் தொல்லியல் மண்டலமாக அறிவித்திடு!

உள்ளிட்ட வாசங்களை மையமாகக் கொண்டு கோலமிடவும்.

👉பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல்

டங்ஸ்டன் எதிர்ப்புப் பொங்கல்!

வேண்டாம் டங்ஸ்டன்………………!

BAN TUNGSTAN…………………………..! வாசகங்களை இணைத்து குலவை இடவும்.

👉 சல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட மாடுகளுக்கு வண்ணமிடும் பொழுது வேண்டாம் டங்ஸ்டன், Ban TUNGSTAN, வேதாந்தாவே வெளியேறு.


13 உயிர்களை சுட்டுக்கொன்ற வேதாந்தாவே வெளியேறு உள்ளிட்ட வாக்கியங்களில் எழுதி வைக்கவும்.

👉பொங்கல் வைக்கும் பொழுதோ இன்னபிற பொங்கல் தருணங்களிலோ டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து காணொளிகளை பதிவு செய்யலாம்.


👉 இவ்வான டங்ஸ்டன் எதிர்ப்புப் பொங்கலை கொண்டாடும் போது அவற்றை மறக்காமல் சமூக ஊடகங்களிலும் பதிவு செய்யவும்.

👉 வீடுகளிலோ, தெருக்களிலோ, ஊர்களிலோ, தனியாகவோ, கூட்டாகவோ இணைந்து இந்நிகழ்வினை கொண்டாடலாம்.

👉தாங்கள் எந்த வடிவிலும் டங்ஸ்டன் எதிர்ப்பினை பொங்கல் விழாக்களில் பதிவு செய்தல் வேண்டும்.

டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

சேக் முகைதீன்.

By TN NEWS