சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர் தாலுக்கா நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எம்.தவசி அவர்கள் ஈராக் நாட்டிற்கு வேலைக்கு போனவர் உடல்நிலை சரியில்லாமல் 29.12.2024 அன்று ஈராக்கில் இறந்து விட்டார்.
ஆதலால் அவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டுமென எம்.தவசியின் குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்/ தமிழகத்தில் உள்ள நல அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு 09.01.2025 அன்று எம்.தவசியின் மனைவி த.ஜெயந்தியும்/குடும்பத்தினரும் மற்றும் குவைத் நாட்டில் உள்ள எம்.தவசியின் நண்பர் கண்ணன் ஆகியோர் மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சி தென்னிந்திய பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளரும், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவருமான ராஜா உடையார் அவர்களை தொடர்பு கொண்டு எம்.தவசியின் உடலை தாயகம் கொண்டு வந்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
ஆதலால் ராஜா உடையார் அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை, ஈராக் நாட்டில் உள்ள இந்திய அம்பாசிடர் சோவுமேன் பகுச்சி & சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமும் தொலைபேசி மூலமாகவும்/ கடிதம் மூலமாகவும் எம்.தவசியின் உடலை போர்கால அடிப்படையில் தாயகம் கொண்டு வர உதவி செய்ய வேண்டுமென ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
ஆதலால் விரைவில் எம்.தவசியின் உடல் ஈராக் நாட்டிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா நாட்டார்மங்கலம் கிராமத்திற்கு கொண்டு வர ராஜா உடையார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


