இடம்: கடலூர்,
கடலூர் மாவட்ட அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் (Anatomy) துறையின் இழையியல் (Histology) பிரிவு சார்பில் திசு நுண்ணோக்கி வரைபடக் காட்சிகள் தொடர்பான கோலம் (Diagram) போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் முதலாவது ஆண்டு மருத்துவ மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது அறிவும் கலைத் திறனையும் வெளிப்படுத்தினர். திசு அமைப்புகளை நுணுக்கமாக வரைபடமாக சித்தரித்த மாணவர்களின் படைப்புகள் பாராட்டைப் பெற்றன.
போட்டியில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் பாலன், துணை முதல்வர் சசிகலா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஸ் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் தாரணி ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர்.
இந்த நிகழ்வு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு, மருத்துவப் பயிற்சியில் காட்சி அறிவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
சிவகுமார், சிதம்பரம் செய்தியாளர்

