Wed. Apr 22nd, 2026

தேதி: ஏப்ரல் 22, 2026
இடம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (23.04.2026) நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்கு எந்திரங்கள், தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி அவர்களின் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டு, 319 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மொத்தம் 382 வாக்கு எந்திரங்களும் (EVM) அதே எண்ணிக்கையில் 382 வி.வி.பேட் (VVPAT) கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS