குடியாத்தம், ஏப்ரல் 22:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரதராமி கிராமத்தில் இன்று (22-04-2026) மாலை சுமார் 4.30 மணியளவில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரதராமி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (தந்தை: சக்கரபாணி) என்பவருக்கு சொந்தமான ஈச்சர் லாரி (TN 24 AQ 9671), வேலூரிலிருந்து வைக்கோல் ஏற்றி பரதராமி நோக்கி வந்து கொண்டிருந்தது. ராஜமன்னார் ஏரி அருகே சென்றபோது, லாரி மீது இருந்த வைக்கோல் மேல் மின் கம்பி உரசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீப்பற்றி, லாரி முழுவதும் வேகமாக எரிய தொடங்கியது.
இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். எனினும், லாரியில் இருந்த வைக்கோல் பெருமளவில் சேதமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்