கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது…!
சென்னை, பிப்.14 :
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படத்தை எரித்து காங்கிரஸ் தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை,
“100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை அகற்றியுள்ளனர். மகாத்மா காந்தியின் பெயர் பாஜகவுக்கு ஏன் கசக்கிறது? ஆர்.எஸ்.எஸ் சொல்வதை பாஜக கேட்கிறது. இதைத்தான் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்.
மகாத்மா காந்தி – ராமர் பக்தர்கள் உட்பட அனைவரும் சமம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஏற்றத்தாழ்வுடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறது. காந்தியை அவர்கள் படுகொலை செய்தார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்தில் மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை சேர்க்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ் திட்டம்; அதையே பாஜக நடைமுறைப்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போது, போலீஸார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சுமார் 250-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், இமையா கக்கன், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மௌலானா எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர்கள் ஜோதி பொன்னம்பலம், விஜய் தனசேகர், கராத்தே செல்வம், இலக்கிய அணி தலைவர் பி.எஸ். புத்தன், நந்தனம் ஆதியார், மயிலை தாமஸ், மயிலை தமிழ் இன்பன், வேளச்சேரி சத்தியமூர்த்தி, மலர்க்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மந்தைவெளி ராஜேஷ், லஸ் தினேஷ், அசோக் குமார், சுதாகரன், சரண்ராஜ், பிரேம் குமார், சதீஷ் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
📸 கேமராமேன் : ஏ. தமிழ் இன்பன், மயிலாப்பூர்
✍️ செய்தியாளர் : சதீஷ்குமார், பி.ஆர்.ஓ
🗞️ தமிழ்நாடு டுடே

