Fri. Feb 13th, 2026

திருவனந்தபுரம் – பிப்ரவரி 12

நாடு தழுவிய 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக, கேரளா தலைநகர் திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

இன்று,

தம்பானூர் பேருந்து நிலையம்

கிழக்கேகோட்டை பேருந்து நிலையம்

பத்மநாபசுவாமி கோவில் வாசல் பகுதிகள்

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதிகள்

கிள்ளிபாலம்

கரமான

தலைமை செயலகம் சுற்றுவட்டாரம்

கேரளா யூனிவர்சிட்டி

ஜகதி ஜங்ஷன்

நேமம்

பாப்பனம்கோடு

ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிய காட்சியை காண முடிந்தது. போராட்டத்தின் காரணமாக நகரம் முழுவதும் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு டுடே செய்தியாளர்: V. J. ஷாலு, கேரளா, திருவனந்தபுரம்

By TN NEWS